நாகபட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை இன்று முதல் ஆரம்பம்!

Date:

நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.

இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் 23 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 10 ஆம் திகதி சிவகங்கை பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

அதற்கமைய அன்றைய தினம் காலை 8 மணியளவில் நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட சிவகங்கை பயணிகள் கப்பல், நண்பகல் 12 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.

இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், நாகபட்டினம் முதல் காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் பிட்டபெத்தரவில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான...

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கூடிய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று...

ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45...

2026ல் 6 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு பயணிகளின் வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...