பிரித்தானியாவில் வெடித்துள்ள வன்முறை: பயண எச்சரிக்கை விடுத்துள்ள நாடுகள்!

Date:

பிரித்தானியாவின் பல பகுதிகளில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து பிரித்தானியாவுக்குச் செல்லவேண்டாம் என்று சில நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பிரித்தானியாவிலிருக்கும் தங்கள் நாட்டவர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

பிரித்தானியாவின் பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதனால் பிரித்தானியாவிலுள்ள தங்களது நாட்டவர்களுக்கு சில நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

முதலாவது பயண எச்சரிக்கை விடுத்த நாடாக மலேசியா  லண்டனிலிருக்கும் உயர் ஸ்தானிகர் மூலம், மலேசிய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், பிரித்தானியாவுக்குச் செல்லும் மற்றும் பிரித்தானியாவிலிருக்கும் மலேசிய நாட்டவர்கள், போராட்டங்கள் நடக்கும் இடங்களிலிருந்து விலகியிருக்குமாறும், கவனமாக இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி நடந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

இதனை தொடர்ந்து, கனடாவும் , அவுஸ்திரேலியாவும் பயண எச்சரிக்கை விடுத்துள்ளன.
மேலும், சுவிட்சர்லாந்து பயண எச்சரிக்கை விடுக்காமல், தங்கள் குடிமக்கள் போராட்டங்கள் நடைபெறும் இடத்துக்குச் செல்லவேண்டாம் என்றும் வன்முறை வெடிக்கக் கூடும் என்றும், போக்குவரத்துக்கு இடையூறும் தாமதமும் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.

 

 

Popular

More like this
Related

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச்...

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் பிட்டபெத்தரவில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான...

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கூடிய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று...

ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45...