மக்கள் வங்கி பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

Date:

மக்கள் வங்கியின் கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மக்களின் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களைக் குறிவைத்து சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் போலி விளம்பரங்கள் மூலம் பொது வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் தனிப்பட்ட கணக்குத் தகவல்களைச் சேகரிக்கும் திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்தள்ளது.

இதன் படி, அவசர நிதித் தேவைகள் தொடர்பாக, மக்கள் வங்கி, “சென்ட்ரல் லோன்” என்ற நிறுவனத்துடன் இணைந்து, சலுகை வட்டியில் கடன் வழங்குவதாகக் கூறி, தனிப்பட்ட வங்கித் தகவல்களையும், முக்கியத் தகவல்களையும் பல்வேறு தொலைபேசி மற்றும் வட்ஸ்அப் எண்களின் மூலம் பெறுவதற்கு முயற்சிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், “சென்ட்ரல் லோன்” என்ற நிறுவனத்திற்கும் மக்கள் வங்கிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் வேறு எந்த மூன்றாம் தரப்பினர் ஊடாகவும் கடன் வழங்குவதில்லை என்றும் மக்கள் வங்கி அறிவித்துள்ளது.

அத்தோடு, கணக்கு எண்கள், வங்கி அட்டை எண்கள், பின் எண்கள், OTP எண்கள் போன்றவற்றை அல்லது நிகழ்நிலை பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை இதுபோன்ற மோசடி தரப்பினருடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்குமாறு அனைத்து வாடிக்கையாளர்களையும் மக்கள் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

 

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...