உச்சக்கட்ட பதற்றம்: லெபனானில்  உள்ள தமது பிரஜைகளை உடன் வெளியேறுமாறு பிரித்தானியா, அவுஸ்திரேலியாஉத்தரவு

Date:

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் லெபனானில்  உள்ள தமது பிரஜைகளை உடன் வெளியேறுமாறு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா நாடுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன.

லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த தாக்குதலை அடுத்து ஹிஸ்புல்லா இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அவுஸ்திரேலியர்கள் லெபனானில் இருந்து விரைவில் வெளியேற வேண்டும் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதேபோன்று அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவும் இதே கோரிக்கையை தங்கள் நாட்டு மக்களிடம் விடுத்துள்ளன. இதேவேளை சுமார் 15,000 அவுஸ்திரேலியர்கள் லெபனானில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு வழக்கின் தீர்ப்பு நாளை

உயர் நீதிமன்றின் மூவரடங்கிய விசேட நீதிபதி குழாம் முன்னிலையில் நாளைய தினம்...

2 ஆண்டுகளை நிறைவு செய்தது ஜனாதிபதி அனுரவின் ஆட்சி!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்று இன்றுடன் (21)...

நாட்டின் பல மாவட்டங்களுக்குப் மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களுக்குப் புதுப்பிக்கப்பட்ட மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்பை தேசிய...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. அளவான பலத்த மழை

வங்காள விரிகுடாவில் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம்...