வயது முக்கியமில்லை: 102 வயதில் 2, 100 மீற்றர் உயரத்திலிருந்து குதித்து சாகசம்

Date:

பிரிட்டனைச் சேர்ந்த 102 வயது மூதாட்டி ஒருவர் ஸ்கை டைவிங் எனப்படும் வான்சாகசத்தில் ஈடுபட்டு புதிய உலக சாதனை புரிந்துள்ளார்.

சஃபோல்கில் உள்ள பென்ஹால் கிரீன் கிராமத்தைச் சேர்ந்த மானெட் பெய்லி எனும் அந்த மூதாட்டி, தனது 102ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் இந்தச் சாகசத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், மூன்று தொண்டு நிறுவனங்களுக்குப் பணம் திரட்டுவதற்காகவும் இந்தச் சாதனை முயற்சியை அவர் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பெய்லி, கிட்டத்தட்ட 2,100 மீற்றருக்கும் அதிகமான உயரத்திலிருந்து குதித்து இந்தச் சாகசத்தைப் புரிந்ததாகவும் இந்தச் சாதனை முயற்சியின் மூலம் 30,000 பவுன்ஸ் திரட்ட திட்டமிட்டிருந்ததாகவும் கிட்டத்தட்ட 14,000 பவுன்ஸ் (S$24,000) திரட்டியுள்ளதாகவும் சொல்லப்பட்டது.

இதன்மூலம், 2017ஆம் ஆண்டு மே மாதம், 101 வயது முதியவர் வெர்டுன் ஹேஸ், நிகழ்த்திய சாதனையை முறியடித்து அதிக வயதில் வான்சாகசத்தில் ஈடுபட்ட பிரிட்டனைச் சேர்ந்தவர் எனும் பெருமையைத் பெய்லி பெற்றார் என ‘தி கார்டியன்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

வயதானாலும் முயற்சி செய்தால், எதையும் சாதித்து காட்டலாம் என நிரூபித்து காட்டிய 102 வயது மூதாட்டி கூறியதாவது,

ஸ்கை டைவிங் செய்யும் போது கண்களை இறுக மூடிக்கொண்டேன். நான் மிகவும் வேகமாக பயணிப்பது போல் தோன்றியது. எனது செயல் வயதானவர்களை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும் என நம்புகிறேன்.

நான் சுறுசுறுப்பாக செயல்படுவற்கு காரணம் என்ன என்றும், முதுமையின் ரகசியம் என்ன என்று மக்கள் அடிக்கடி கேட்கின்றனர். நிச்சயமாக இது அதிர்ஷ்டம். நான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சுறுசுறுப்பாக இருக்கிறேன் என்றார்.

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...