வாக்குச்சீட்டிலிருந்து மறைந்தது ”யானை” சின்னம்: குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளியா?

Date:

இலங்கையில் இது வரையில் இடம்பெற்றுள்ள சில ஜனாதிபதித் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாரம்பரியச் சின்னமான யானைச் சின்னம் வாக்காளர் சீட்டில் காணப்படவில்லை.

அதற்கு பதிலாக ஐக்கிய தேசியக் கட்சி சரத் பொன்சேக்காவின் அன்னச்சின்னத்திற்கு  ஆதரவு வழங்கியிருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்கியிருந்த அதே கட்சியின் பிரதித் தலைவராக இருந்த சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தது.

சஜித் பிரேமதாச அப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக இருந்த போதிலும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேறு ஒருவரின் கட்சியையும் சின்னத்தையும் தேர்ந்தெடுத்திருந்தார்.

இந்த வருடமும் ஜனாதிபதித் தேர்தல் வாக்குச் சீட்டில் ஐ.தே.கவின் யானை தென்படாது. எனினும், ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 69 இலட்சம் பேரின் விருப்பத்தைப் பெற்றிருந்த பொதுஜன பெரமுன தற்போது முற்றாகச் சிதைவடைந்துள்ளமை இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் மற்றுமொரு விசேட அம்சமாகும்.

இன்று, பொதுஜன பெரமுனவின் பலமான உறுப்பினர்கள் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதால், பொதுஜன பெரமுன தோற்றுப் போய்விட்டதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, நாமல் ராஜபக்ச என்ற ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் வாரிசின் எதிர்கால அரசியல் இருப்பு குறித்து இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முடிவெடுக்க முடியும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், பொதுஜன பெரமுன எனும் ஜனரஞ்சக அரசியலின் எதிர்காலமும் இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானிக்கப்படும் என்பதும் பலரது கருத்தாக உள்ளது. அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கதிரைச் சின்னமும் மறைந்து விட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முதல் மனைவியின் சம்மதமின்றி 2வது திருமணம் செய்ய முடியாது: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கேரளா மாநிலத்தில் நடந்த வழக்கு ஒன்றில் நீதிபதிகள் வழங்கிய உத்தரவானது பலரது...

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...