வேட்பாளர்கள் 21 நாட்களுக்குள் பிரச்சார செலவுகள் குறித்த அறிக்கையை சமர்பிக்க வேண்டும்!

Date:

அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 21 நாட்களுக்குள் தங்கள் தேர்தல் பிரச்சார செலவுகள் குறித்த முழுமையான அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அவ்வாறு செய்யத் தவறினால் அவர்கள் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டாலும் பதவியை இழக்க நேரிடும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க தேர்தல் செலவினச் சட்டம் பிரச்சாரச் செலவினங்களுக்கான சட்ட வரம்புகளை அமைக்கிறது என ஆணையாளர் நாயகம் ஊடக அறிக்கையில் விளக்கமளித்துள்ளார்.

இந்த வரம்புகளை மீறுவது சட்டவிரோதமானது என்பதுடன் சட்ட நடவடிக்கைக்கு வழிவகுக்கும். தேர்தல் செலவுக் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ், அனுமதிக்கப்பட்ட தொகையை விட அதிகமாகச் செலவு செய்ய அனுமதிக்கப்படமாட்டாது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 21 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தங்களது வருமானம் மற்றும் செலவுகள் குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த அறிக்கை 10 நாட்களுக்கு பொதுவெளியில் காட்டப்படும். வேட்பாளர் ஒருவர் அதிகமாகச் செலவு செய்வது கண்டறியப்பட்டால், நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அவர்களது அலுவலகத்தை ரத்து செய்ய முடியும்” என்று சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...