ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார்

Date:

இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட நிலையில் புதிய தலைவரை ஹமாஸ் ஆயுதக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி ஆரம்பித்து தொடர்ந்தும் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில் காசா முனையில் செயற்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக் குழுவினர், இஸ்ரேலில் இருந்து சுமார் 251 பேரை பணயக் கைதிகளாக கடத்திச் சென்றது.

இதிலிருந்து இரு தரப்பினருக்கும் இடையிலான போர் மேலும் தீவிரமாகியது.

இதனிடையே ஹமாஸ் ஆயுதக் குழுவின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த 31ஆம் திகதி ஈரான், தெஹ்ரானிலுள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து கொல்லப்பட்டார்.

இக் கொலையை இஸ்ரேல் நடத்தியதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில், ஹமாஸ் அமைப்பின் அடுத்த தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், தற்போது ஹமாஸ் ஆயுதக் குழுவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹமாஸ் ஆயுதக் குழுவின் காசா முனை பிரிவுக்கு மட்டும் தலைவராக செயற்பட்டு வந்த யாஹ்யா சின்வார் தற்போது ஒட்டுமொத்த ஹமாஸ் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஒக்டோபர் 7ஆம் திகதி இடம்பெற்ற ஹமாஸ் ஆயுதக் குழு தாக்குதலின் பின்னணியில் செயற்பட்ட முக்கிய நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

டிசம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் 50,000 ஐத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப்...

தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப காலம் நீடிப்பு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, தரம் 6 இல்...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு குவைத் தலைவர்கள் இரங்கல்.

குவைத் நாட்டின் தலைவர்கள் டிட்வா புயல்தாக்கத்தினால் துயரத்தில் வாடும் இலங்கை மக்களுக்கு...

இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரண திட்டத்தை ஆரம்பித்து வைக்கிறது கத்தார் செரிட்டி.

அபிவிருத்திக்கான கத்தார் நிதியத்தின் நிதிப் பங்களிப்புடன் இலங்கைக்கான கத்தார் அரசின் தூதரகத்துடன்...