𝐒𝐇𝐎𝐖 𝐌𝐄 𝐓𝐇𝐄 𝐕𝐈𝐄𝐖: சாதனை நடை பயணம் மேற்கொள்ளும் சஹ்மிக்கு நாளை பேருவளையில் கௌரவிப்பு நிகழ்வு!

Date:

இலங்கையை சுற்றி நடை பயணம் மேற்கொள்ளும் பேருவளை இளைஞன் சஹ்மி ஷஹீத்துக்கு இன்று (25) கொழும்பில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

பேருவளையிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த இளைஞன் சஹ்மி ஷஹீத் தற்போது கொழும்புக்கு வருகைத் தந்துள்ளதுடன் அவருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

நாளை (26) பேருவளையில் கால்பதிக்கவுள்ள சஹ்மி ஷஹீத்  இறுதிகட்ட நடை பவனியை நிறைவு செய்து, பேருவளை மக்களையும் சந்திக்கவுள்ளார்.

4.30 மணியளவில் தன் பயணத்தை சுவங்கிய காலி வீதி சிமி ஹோல்டிங் நிறுவன வளாகத்தின் தன் பயணத்தை நிறைவு செய்யவுள்ளதோடு, பேருவளை கடற்கரை மைதானத்தில் இவருக்கான பாரிய கௌரவிப்பு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, சிமி ஹோல்டிங் நிறுவன உரிமையாளர் அல்ஹாஜ் இஜ்லான் யூசுஃப் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இளைஞன் சஹ்மி ஷஹீத்தின் பயணத்தை ஊக்குவிக்கும் நோக்கில் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டுக் கழகங்கள், பொது அமைப்புக்கள், பொதுமக்கள் ஆகியோர் இன, மத, மொழி,பிரதேச,அரசியல் வேறுபாடுகளின்றி வரவேற்றனர். அதிகமானவர்கள் அவருடன் சிறிது தூரம் கால்நடையாகப் பயணித்து உற்சாகப்படுத்துகின்றனர்.

இலங்கையில் அனைவரும் அறிந்த 𝐒𝐇𝐎𝐖 𝐌𝐄 𝐓𝐇𝐄 𝐕𝐈𝐄𝐖 எனும் பெயரில் இலங்கையை சுற்றி 1500 கிலோமீற்றர் நடந்து வருகின்றார்.

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் சுதந்திரமாக இலங்கையை சுற்றி வர முடியும் என யாவருக்கும் தெரியபடுத்த விரும்புகின்றார்.

மற்றும் இலங்கை சுற்றுலாதுறைக்கு இந்த செயற்பாட்டின் ஊடாக ஏதோ ஒரு வகையில் உறுதுணையாக இருப்பதாக எண்ணுகின்றார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...