ஹிரோஷிமா (Hiroshima) என்றாலே நம் மனதில் தோன்றுவது அழிவு, மரணம், துயரம்.
இரண்டாம் உலகப் போரின் கொடூர முகத்தை உலகிற்கு காட்டிய நிகழ்வுதான் ஹிரோஷிமா மீதான அணுகுண்டு தாக்குதல்.
அந்த கொடூர நிகழ்வு நடந்து இன்றுடன் 79 ஆண்டுகளாகி உள்ளது. அந்த பேரழிவு ஏற்படுத்திய வடு இன்றும் ஆறாமல் உள்ளது.
உலகின் முதல் அணுஆயுத தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா, அணுகுண்டு வீச்சின் 79 வது ஆண்டு நினைவு தினத்தை இன்று அனுசரிக்கிறது.
இரண்டாம் உலகப் போர்: இரண்டாம் உலகப் போர், மனித குலத்தின் இருண்ட காலகட்டங்களில் ஒன்று. அப்பாவி மக்கள், குழந்தைகள், முதியவர்கள் என எந்த கரிசனமும் இன்றி மக்களை காவு வாங்கிய போர்.
இந்தப் போரில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாடுகள் தீவிரமான மோதலில் ஈடுபட்டது. அதுமட்டுமில்லாமல் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா அணுகுண்டு தயாரித்தது.
செப்டம்பர் 1, 1939 அன்று ஜெர்மனி, போலந்து மீது படையெடுத்த பின்னர் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது.
பேரழிவின் விளைவுகள்: ஹிரோஷிமாவில் குண்டு விழுந்த இடத்திலிருந்து சுமார் 280 மீட்டர் சுற்றளவுக்குள் இருந்த அனைத்தும் ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் சாம்பலாகி இருந்தன.
வீசப்பட்டது அணுகுண்டு என்பதே குண்டு வீசப்பட்ட 16 மணி நேரத்துக்கு பின்னர் தான் தெரிந்தது. அணுகுண்டிலிருந்து வெளிப்பட்ட வெப்பத்தின் அளவு 3 லட்சம் டிகிரி செல்சியஸ். கட்டங்கள் தரைமட்டமாயின.
அணுகுண்டினால் ஏற்பட்ட கதிர்வீச்சு பாதிப்பு மனிதகுலத்தின் பேரழிவானது. கதிர்வீச்சினால் பல தலைமுறையினர் பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் உலக நாடுகளை அச்சுறுத்தியது.
ஹிரோஷிமா இன்று: ஹிரோஷிமா இன்று, ஒரு நினைவுச் சின்னமாகத் திகழ்கிறது. அணு ஆயுதங்களின் கொடுமைகளை உலகிற்கு நினைவுபடுத்தும் வகையிலும், அமைதிக்கான ஒரு அடையாளமாகவும் விளங்குகிறது.
உலகின் முதல் அணுஆயுத தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா, அமெரிக்க அணுகுண்டு வீச்சின் 79 வது ஆண்டு நினைவு தினத்தை நாளை அனுசரிக்கவுள்ளது.