அமெரிக்காவை விட்டு ஈரானுடன் சேரும் சவூதி? இஸ்ரேலால் ஒன்றிணையும் இஸ்லாமிய நாடுகள்!

Date:

இஸ்ரேலுக்கு எதிராக சவூதி அரேபியாவும் அமெரிக்காவை விட்டுவிட்டு ஈரானுடன் கைகோர்க்க வாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமின்றி இஸ்ரேலுக்கு எதிராக அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் 3ம் உலகப்போர் தொடங்குகிறதா? என்ற பெரிய அச்சம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 10 மாதங்களாக போர் நடந்து வரும் நிலையில் காசாவில் சுமார் 40 ஆயிரம் பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த போர் விவகாரம் தற்போது உலகப்போருக்கான அச்சுறுத்தை ஏற்படுத்தி உள்ளது.  காசா மீதான போர் நடவடிக்கையை இஸ்ரேல் கைவிட வேண்டும் என்று பிற நாடுகளை போல் இஸ்லாமிய நாடுகள் தொடக்கம் முதலே கூறி வருகின்றன. ஆனால் இஸ்ரேல் போரை கைவிடவில்லை.

காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக அழிப்போம் என்று இஸ்ரேல் சூளுரைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை ஈரான் கடுமையாக கண்டித்துள்ளது. மேலும் போரை கைவிடாவிட்டால் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என அறிவித்தது. அதுமட்டுமின்றி இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் லெபனான் நாட்டில் இயங்கி வரும் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மூலம் ஈரான் தாக்க தொடங்கியுள்ளது.

மேலும் இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈரான் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரானின் புதிய அதிபர் மசூத் பெசஷ்கியானும், கத்தார் பிரதமர் அப்துல் ரஹ்மான் அல் தானியும் நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.

இந்த வேளையில் இஸ்ரேலின் போர் குற்றத்தை தடுக்க வேண்டும். இதற்காக அனைத்து இஸ்லாமிய நாடுகளும், பிற நாடுகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்று தெரிவித்தார்.

அதேபோல் கத்தார் பிரதமர் அப்துல் ரஹ்மான் அல் தானியும், இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டித்தார். மேலும் சர்வதேச நாடுகள் அனைத்தும் ஒன்றாக இணைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்றாக இணைகிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

ஏனென்றால் ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சரும், சவுதி அரேபியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரும் கடந்த 25ம் தேதி தான் தொலைபேசியில் பேசினர்.

அப்போது இஸ்ரேல் – காசா இடையே நடக்கும் போர் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அதன்பிறகு தற்போது ஈரான் – கத்தார் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

அதுமட்டுமின்றி இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேமில் அல்-அக்ஸா மசூதி பகுதியில் யூதர்கள் பிரார்த்தனை செய்யும் வகையில் சர்ச் கட்ட இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இடாமர் பென் ஜிவீர் கூறியுள்ளார்.

இதனை சவூதி அரேபியா கண்டித்துள்ள நிலையில் அதுபற்றியும் ஈரானுடன் விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சவூதி அரேபியா அமெரிக்காவுடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது.

ஈரானை விட அமெரிக்காவுடன் சவூதி அரேபியா நெருக்கம் காட்டி வரும் நிலையில் தற்போது சவூதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேசி இஸ்ரேல் விவகாரம் குறித்து பேசியுள்ளார்.

அதேபோல் அல் அக்ஸா மசூதியில் சர்ச் கட்டுவது தொடர்பான இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் பென் ஜிவீர் கருத்தை ஜோர்டான் நாடும் விமர்சனம் செய்துள்ளது. ஜோர்டானும் இஸ்லாமிய நாடாக உள்ளது.

இதனால் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டில் அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்றாக இணைகிறதா? அப்படி இணைந்து ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேல் மீது போர் தொடுக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...