இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, பௌத்த மதத்தை சேர்ந்தவர்களை சந்திக்கும் பங்களாதேஷ் இடைக்கால தலைவர்

Date:

பங்களாதேஷில் சிறுபான்மையினர் மீதான தாக்குதலை தடுக்க கோரி கடந்த 10ம் திகதி தலைநகர் டாக்கா உள்பட 2 இடங்களில் 7 இலட்சம் இந்துக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

ஆனாலும் இன்னும் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று இந்து, கிறிஸ்தவம் மற்றும் புத்த மதத்தை சேர்ந்தவர்கள் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸை சந்திக்க உள்ளனர்.

பங்களாதேஷில்  ஏற்பட்ட மாணவர் போராட்டத்தால் கடந்த 5ம் திகதி பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.

அதன்பிறகு கடந்த 8ம் திகதி பங்களாதேஷில்  இடைக்கால அரசு அமைந்தது. நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இந்த இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது.

தற்போது ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இராஜினாமா செய்தாலும் கூட பங்களாதேஷில்   போராட்டம் ஆங்காங்கே நடந்து வருகிறது.

குறிப்பாக இந்துக்கள் குறிவைத்து தாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்துக்கள் மட்டுமின்றி அங்கு சிறுபான்மையினராக வசிக்கும் மக்களின் வழிபாட்டு தலங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

பங்களாதேஷில் 52 மாவட்டங்களில் இந்துக்களுக்கு எதிராக மொத்தம் 205 தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்நிலையில் தான் இந்துக்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும் எனக்கூறி கடந்த 11ம் திகதி தலைநகர் டாக்கா மற்றும் அந்நாட்டின் 2வது பெரிய நகரான சிட்டகாங்கின் வரலாற்று சிறப்பு மிக்க செராகி பஹார் சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 7 இலட்சம் பேர் பங்கேற்றனர்.

இது இடைக்கால அரசுக்கு பிரஷரை கொடுத்தது. இதையடுத்து இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஷ்   தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்துவது என்பது கொடூரமானது. போராட்டங்களை முன்னெடுக்கும் மாணவர்கள் இந்து, கிறிஸ்தவ மற்றும் பௌத்த குடும்பங்களை பாதுகாக்க வேண்டும். அவர்களும் இந்த நாட்டின் மக்கள் தானே? நாட்டை காப்பாற்ற முடிந்த உங்களால் சில குடும்பங்களை காப்பாற்ற முடியாதா என்ன? சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்த கூடாது என்று நீங்கள் சொல்ல வேண்டும்.

அவர்கள் நமது சகோதர – சகோதரிகள் தான். நாம் அனைவரும் ஒன்றாக தானே போராடினோம். இனியும் ஒன்றாக இருப்போம். அப்போது தான் தேச ஒற்றுமை வலிமையாக இருக்கும்” என்றார். ஆனாலும் இன்னும் தாக்குதல் சம்பவம் மட்டும் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் தான் இந்து, கிறிஸ்தவம் மற்றும் பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள் இன்று இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுசை சந்திக்க உள்ளனர்.

இதில் சிறுபான்மையினரின் நலன்களை காக்கும் கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சில் மற்றும் வங்கதேச பூஜா உத்ஜாபான் பரிஷத் உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த சந்திப்பின்போது சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது, தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வழங்க உள்ளனர்.

Popular

More like this
Related

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...