இலங்கை மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரில் மார்க்வூட்டிற்கு பதிலாக ஜோஷ் ஹல் அழைப்பு

Date:

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் புதிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹல் அழைக்கப்பட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் போது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் மார்க்வூட் எஞ்சிய இரண்டு போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, ஜோஷ் ஹல் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். 20 வயதான அவர் லீசெஸ்டர்ஷைர் கவுண்டி அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.

எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் விளையாடாத அவர் இதுவரை ஒன்பது முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

எனினும் இலங்கை அணி இங்கிலாந்து தொடரை ஆரம்பிப்பதற்கு முன்னர் லயன்ஸ் அணிக்கெதிராக விளையாடிய பயிற்சிப் போட்டியில் ஜோஷ் விளையாடியதோடு, அந்தப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அந்த பயிற்சி ஆட்டத்திலும் இலங்கை அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 6 அடி 7 அங்குல உயரம் கொண்ட ஜோஷ் மணிக்கு 145 கிமீ வேகத்தில் பந்துவீசுவார்.

இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸில், மார்க்வூட் மணிக்கு 149 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய பந்து தாக்கியதில், தினேஷ் சந்திமலுக்கு விரலில் காயம் ஏற்பட்டது.

எவ்வாறாயினும், இங்கிலாந்தின் ஆரம்ப அணியில் இடம்பிடித்திருந்த ஒல்லி ஸ்டோன், மார்க்வூட்டிற்குப் பதிலாக அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டோன் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இருப்பினும், ஜூன் 2021க்குப் பிறகு, அவர் இங்கிலாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...

செப். 25 – ஒக். 01 வரை சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனம்!

சிறுவர் தினத்தை முன்னிட்டு செப். 25 – ஒக். 01 வரை...

இலங்கைக்கு 963 மில்லியன் யென் மானிய உதவியை வழங்கியது ஜப்பான் அரசு!

இலங்கையின் பால் உற்பத்தித் துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், கடற்படையின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு...

முஜாஹிதீன்களின் தலைவரும் உறுதிப்பாட்டின் சின்னமுமான உமர் முக்தாரின் தியாக நினைவு நாள்!

16.09.1931- 16.09.2025 முஜாஹிதீன்களின் தலைவராகவும் உறுதிப்பாட்டின் சின்னமாகவும் விளங்கிய உமர் முக்தார் 1862...