இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள பென்-குரியன் விமான நிலையம் வெறிச்சோடிப் போய் காணப்படுகிறது.
இஸ்ரேலுக்கான நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்திருப்பதால், குறித்த விமானநிலையம் இவ்வாறு காணப்படுகின்றது.
சில விமான நிறுவனங்கள் அடுத்த ஆண்டு வரை இஸ்ரேலுக்கான அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளன.
ஈரானில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், இதுவரை இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை என்ற போதும், அந்த நாட்டிற்கான விமான சேவைகளை பல நிறுவனங்கள் ரத்து செய்யத் தொடங்கியுள்ளன.
ஹமாஸ் படைகளின் மிக முக்கியமான இரு தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானில் நடந்த தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் கொல்லப்பட்ட நிலையில், பழி தீர்ப்பது உறுதி என்றே அந்த நாடு சூளுரைத்துள்ளது.
மட்டுமின்றி, ஜூலை 13ம் திகதி ஹமாஸ் படைகளின் ராணுவப் பிரிவு தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இப்படியான நெருக்கடி மிகுந்த சூழலில், விமான சேவை நிறுவனங்கள் இஸ்ரேலுக்கான விமானங்களை ரத்து செய்ய தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Delta மற்றும் United விமான சேவை நிறுவனங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக இஸ்ரேலுக்கான சேவையை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
🚨#BREAKING: Video shows Israel’s Ben-Gurion Airport in Tel Aviv nearly empty as hundreds of flights are suspended and some airlines have canceled flights to Israel until next year, amid fears of a potential Iranian strike in retaliation.#Iran #Israel
— The Breaking Report (@TheBreakingRprt) August 7, 2024