ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதியை, இஸ்ரேல் சமீபத்தில் கொன்றதை தொடர்ந்து, இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர் தீவிரம் அடைந்திருக்கிறது. இதனையடுத்து தன் நாட்டு மக்களுக்கு 48 மணி நேர அவசர நிலையை இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.
ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாவின் பெரியளவிலான தாக்குதல்களை அறிந்த இஸ்ரேல் லெபனானில் முன்கூட்டியே தாக்குதல்களை நடத்துவதாக இஸ்ரேல் இன்று அறிவித்தது.
காசாவில் ஹமாஸுடன் ஏற்கனவே போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் ஹிஸ்புல்லாவால் ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant நாடு முழுவதும் 48 மணி நேர அவசர நிலையை அறிவித்தார்.
லெபனானை தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லா, கடந்த மாதம் அதன் தளபதி ஃபுவாட் ஷுக்ரைக் கொலை செய்தமைக்கு ஆரம்ப பதிலடியாக இஸ்ரேலை நோக்கி பாரியளவிலான ட்ரோன்களை ஏவியது.
அமெரிக்கா+எகிப்து+அரபு நாடுகள் சேர்ந்து போர் நிறுத்தம் குறித்து, இஸ்ரேலிடமும், ஹமாஸிடமும் பேசி வந்தது. இந்த பேச்சுவார்த்தை அப்படி, இப்படி போய் ஒரு கட்டத்தில் சமாதானத்திற்கு நெருக்கமாக வந்தது. இந்த நேரத்தில்தான், இஸ்ரேல் ராணுவம், ஹிஸ்புல்லாவின் தளபதியை போட்டு தள்ளியது. இதுதான் இப்போதையை பதற்றத்திற்கு காரணம்.
போரில் இதுவரை 40,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர்.