ஈரான் துணை ஜனாதிபதி ஜாவித் ஜப்ரி திடீரென பதவியிலிருந்து விலகியுள்ளமையானது, அந்நாட்டு அரசியலில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
கடந்த ஜூன் 15ஆம் திகதி உலகுவானூர்தி விபத்தில் ஈரானின் ஜனாதிபதி இருந்த இப்ராகிம் ரெய்சி உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து, ஜனாதிபதி பதவிக்கு கடந்த ஜூன் 28,மற்றும் ஜூலை 05 ஆகிய திகதிகளில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.
மொத்தமுள்ள 2.45 கோடி ஓட்டுகளில், 50 சதவீத ஓட்டுக்கள் பெற்று ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மையுடன் ஈரான் ஜனாதிபதியாக மசூத் பெசஷ்கியான் பதவியேற்றார். அவருடன் துணை ஜனாதிபதியாக ம ஜாவித் ஜப்ரி பதவியேற்றார்.
இந்நிலையில் இன்று துணை ஜனாதிபதி ஜாவித் ஜப்ரி திடீரென பதவிவிலகுவதாக தன் ‛எக்ஸ்‛ வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இவர் முன்மொழிந்த 19 உறுப்பினர்களை கொண்ட புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பாக அதிருப்தி அடைந்து, பதவி விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் வேறு பல காரணங்களால் அவர் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகின்றது.