ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் தடைபெற்றிருந்த பள்ளிவாசல்களின் பதிவு வேலைகள் மீண்டும் ஆரம்பம்

Date:

ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பின் நாட்டில் தடைப்பட்டிருந்த பள்ளிவாசல்கள் மீள பதிவு செய்வதற்கான வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டின் பின்னர் நாட்டில் புதிய பள்ளிவாசல்களை பதிவு செய்கின்ற நடவடிக்கைகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், அமைச்சின் உத்தரவுக்கமைய நிறுத்தி வைத்திருந்தது.

அதன்பின்னர் இவ்விடயம் சம்பந்தமாக பல முறை பல முயற்சிகள் இடம்பெற்றிருந்தது. இம்முயற்சிகள் அனைத்தும் கைகூடாமல் போனது.

தற்போது புதிதாக திணைக்களத்தின் பதில் பணிப்பாளராக கடமையை பொறுப்பேற்றுள்ள  M. H. A. M. றிப்லான், உதவிப் பணிப்பாளர்  M.S. அலா அஹமட் மற்றும் இலங்கை வக்ப் சபையின் உறுப்பினர் சட்டத்தரணி M.A. மத்தீன் ஆகியோர் இவ்விடயம் சம்பந்தமாக புத்தசாசனம் மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் மற்றும் செயலாளரோடு பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை முழு மூச்சாக நடாத்தி தடைப்பட்டிருந்த பள்ளிவாசல்கள் பதிவை மீண்டும் மீள ஆரம்பித்துள்ளார்கள்.

அதன் பிரகாரம் 01.08.2024 முதல் பள்ளிவாசல்கள் மீள்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பதிவுச் சான்றிதழ்கள்,  பதிவு தபால் மூலம் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...