உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவு

Date:

காலித் ரிஸ்வான்

கடந்த சில நாட்களாக சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்று வந்த உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப் போட்டி கடந்த திங்கட்கிழமை அன்று வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.

இது சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமராகிய முஹம்மத் பின் சல்மான் அவர்களின் ஆதரவின் கீழ் நடைபெற்றது.

கடந்த 8 வாரங்களாக நடைபெற்று வந்த இந்த E-விளையாட்டுக்கள் உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்க உலகெங்கிலும் இருந்து பல கழகங்கள் மற்றும் வீரர்கள் முதல்முறையாக ரியாத் நோக்கி வந்தனர்.

60 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பரிசுத்தொகையுடன், இந்த நிகழ்வு சுமார் 500 அணிகளையும் 1,500 தொழில்முறை வீரர்களையும் ஈர்த்தது, இது E- விளையாட்டுக்கள் வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

இந் நிகழ்வின் இறுதியல் 2024ம் ஆண்டுக்கான E-விளையாட்டுக்கள் உலகக் கிண்ணத்தின் சாம்பியன்களாக சவூதியின் ஒரு குழுவான “Team Falcons” தெரிவானர். உலகக் கிண்ணமானது அந்நாட்டு முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான அவர்களால் கையளிக்கப்பட்டது.

Falcons கிளப் ஆனது மொத்தம் $7 மில்லியன் பரிசுத் தொகையைப் பெற்றதோடு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில் சிறந்த கிளப்பாகவும் தேர்வானது.

“Call of Duty: Warzone” மற்றும் “Free Fire” சாம்பியன்ஷிப் ஆகிய இரண்டிலும் முதல் இடத்தைப் பெற்று, 12 போட்டிகளில் 5,665 புள்ளிகளைப் பெற்று தரவரிசையில் Falcon அணி முன்னிலை வகித்தது. இந்த வெற்றியானது E-விளையாட்டுக்கள் துறையில் சவூதியின் ஆர்வத்தையும் அதன் பால் உள்ள திறமையையும் எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.

இந்த நிகழ்வானது, கேமிங் மற்றும் E-விளையாட்டுக்களில் ஈடுபடுவோர் மற்றும் ஆர்வமுள்ள சாராரை ஒன்றிணைக்கும் நோக்கில், சர்வதேச E-விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள், E-விளையாட்டுக்களை தயாரிப்பவர்கள் மற்றும் வெளியீட்டாளர்களை ஒரே குடையின்கீழ் கொண்டு வந்தது, இது E-விளையாட்டுக்கள் துறையில் குறிப்பிடத்தக்க மைல் கல்லாக அமைகிறது.

இந்த E-விளையாட்டுப் போட்டியானது அதன் தனித்துவமான multi-game மற்றும் multi-genre வடிவமைப்புடன், உலகின் தலைசிறந்த கிளப்புகளுக்கு இடையேயான போட்டிகளைக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், E-விளையாட்டுக்கள் துறையை முன்னேற்றுவதற்கான சர்வதேச நிறுவனங்களின் முயற்சிகளையும் மேலும் உரமூட்டியது.

அத்தோடு இது சமூகங்களில் E-விளையாட்டுக்களின் நேர்மறையான தாக்கத்தை எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாமல் கலாச்சார பரிமாற்றத்தையும் மேம்படுத்துகிறது. E-விளையாட்டுத் துறையை ஒரு நம்பிக்கைக்குரிய மற்றும் முக்கிய முதலீட்டு வாய்ப்பாக அங்கீகரிக்க நிறுவனங்களை ஊக்குவிக்கவும் செய்துள்ளது.

இந்நிகழ்வானது இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந் நிகழ்வுக் காலத்தில் ரியாத் நகரிற்கு வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை 29% அதிகரித்துள்ளது.

இந்த நிகழ்வின் போது 32 க்கும் மேற்பட்ட மேலதிக பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வானது 500 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் ஈரத்து மொத்தம் 250 மில்லியனுக்கும் அதிகமான மணிநேரம் பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டுக்கான ஒரு புதிய உலக சாதனையாகவும் இது அமைந்துள்ளது.

கேமிங் மற்றும் E-விளையாட்டுக்கள் துறையானது உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் முதலீட்டு மற்றும் தொழில் துறைகளில் ஒன்றாக காணப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில் மட்டும் உலகளாவிய சந்தையில் தோராயமாக $200 பில்லியனை எட்டியுள்ளது.

சவூதி அரேபியா அன்மைக்காலத்தில் முக்கிய உலகளாவிய நிகழ்வுகளை நிகழ்த்துவதிலும் அந்த நிகழ்வுகளை நோக்கி சர்வதேச மக்களை ஈர்ப்பதிலும் குறிப்பிடத்தக்க வெற்றியைக் கண்டுள்ளமை நாம் அறிந்ததே, அந்த வரிசையில் தான் இந்த E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப் போட்டியை நடாத்தியமையும், 2025 ஆம் ஆண்டு E-விளையாட்டுக்களுக்கான ஒலிம்பிக் போட்டியை நடாத்துவதற்கான அறிவிப்பை சவூதி வெளியிட்டமையும் அடங்குகின்றன.

2030 ஆம் ஆண்டாகும் போது E-விளையாட்டுக்களுக்கான முக்கிய தளமாக சவூதி அரேபியா வரவேண்டும் என்ற இலட்சிய நோக்கோடு இவ்வாறான நிகழ்வுகள் அந்நாட்டுத் தலைமைகளின் நேரடி அலோசனையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்கள் அனைத்தும் சவூதியின் விஷன் 2030 இலட்சிய திட்டத்தின் கிழ் வடிவமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

Popular

More like this
Related

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...