உலக முஸ்லிம் லீக் செயலாளர் நாயகம் கலாநிதி முஹம்மத் அல் ஈஸாவின் பங்களிப்போடு நடைபெற்ற ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய குர்ஆன் பெருவிழா!

Date:

அண்மைக்காலத்தில் இடம்பெற்ற மிக்பெரிய குர்ஆன் பெருவிழாவாக கருதப்படுகின்ற உலகெங்கும் இருக்கின்ற குர்ஆன் ஓதல் கலையில் “இஜாஸா” பெற்றவர்களின் பங்குபற்றுதலோடு ஆப்பிரிக்காவின் உலமாக்களும் பங்குகொள்கின்ற மிகப்பெரிய அல்குர்ஆனிய பெருவிழா ஆகஸ்ட் 16ஆம் திகதி நடைபெற்றது.

இந்த நிகழ்வின் விசேட அம்சம் குர்ஆன் ஓதல் கலையில் பத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்ற காரிகளுக்கான போட்டியில் பங்குபற்றிய வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமையாகும்.

உலக அளவில் நடைபெற்ற முதலாவது நிகழ்ச்சியாக கருதப்படுகின்ற இப்போட்டி நிகழ்ச்சியில் குர்ஆனை மிக அழகிய முறையில் அதன் பத்து முறைகளிலும் ஓதும் நிபுணத்துவம் பெற்ற காரிகள் கலந்துகொண்டனர்.

இவ்விழாவை மக்காவிலுள்ள அகில உலக முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்து அனுரசணை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

இப்பெருவிழாவின் மூலம் குர்ஆன் ஓதல். கலைகள் தொடர்பான அறிமுகத்தை வழங்குவதும், குர்ஆனியக் கலைகள் தொடர்பில் ஆர்வமூட்டலுக்கான ஒரு வாய்ப்பாக இந்நிகழ்வை பயன்படுத்திக் கொள்வதும், குர்ஆனோடு தொடர்புடையவர்கள் குர்ஆனை தமது வாழ்க்கையின் முன்னோடியாக கொள்ளக்கூடிய குர்ஆனிய மனிதர்களாக உருவாக்குவதற்கான வழிகாட்டலையும் ஒத்துழைப்பையும் வழங்குவதும் இவ்விழாவின் உயர் நோக்கங்களாக கருதப்படுகின்றன.

இவ்விழாவில் இலங்கையைச் சேர்ந்த நிகவெரட்டிய தேர்தல் தொகுதி கனுக்கெட்டியைச் சேர்ந்த அல் ஹாபிழ் நஸ்ருல்லாஹ் அவர்களும் இஜாஸா தகைமையுடைய காரியாக கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Popular

More like this
Related

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....