உளவியல் பாடநெறிக்கான சிறந்த கல்வி நிறுவனமாக அமேசான் கல்லூரி தெரிவு

Date:

உளவியல் பாடநெறிக்கான சிறந்த கல்வி நிறுவனமாக அமேசான் கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
20 ஆம் திகதியன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற Iconic Awards Sri Lanka – 2024 விருது வழங்கும் விழாவிலேயே இவ்விருது வழங்கப்பட்டது.

நிறுவனத்துக்கான விருதினை அமேசன் உயர் கல்வி (AMAZON COLLEGE & CAMPUS) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இல்ஹாம் மரிக்கார் பெற்றுக்கொண்டார்.

விருதினை பெற்றுக்கொண்ட அவர் அது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,

அமேசான் கல்லூரி நிறுவனமானது 2009 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை சுமார் 15 வருடங்களாக பல கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

பல்வேறுபட்ட புலமைப்பரிசில் திட்டங்களை வழங்கி வருகின்றது. வறிய மாணவர்களுக்கு சலுகை அடிப்படையில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

Diploma, HND, Degree, Masters, PhD வரையிலான பாட நெறிகளை வழங்கி வருகின்றன.

Business Management, Psychology, Counselling, Teacher Training, Caregiver, Childcare, IELTS, English போன்ற பாடநெறிகளுக்கு முதலிடம் வழங்கப்பட்டு பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இது வரை 5 விருதுகள் கிடைக்கப்பற்றுள்ளது இது ஆறாவது விருதாக காணப்டுகின்றது.

ஒவ்வொரு வருடமும் பிரமாண்டமான முறையில் BMICH இல் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது .

இந்த விருதும் கெளரவமும் எமக்கு மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் தந்துள்ளது. எமது இந்த வெற்றிக்கும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் பக்கபலமாக இருந்த நிறுவனத்தின் சகல ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...