உள்ளூராட்சி மன்றத் தேர்தல்:சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற நடவடிக்கை!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

2022ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமையின் ஊடாக அதற்காக முன்வைக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புற தெரிவித்துள்ளார்.

அந்த வேட்புமனுக்களின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டால் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு வாக்களிக்க முடியாது போகுமென இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புற தெரிவித்தார்.

அதேபோன்று 18 வயது பூர்த்தியடைந்த மேலும் சிலர் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்க முடியாத நிலை ஏற்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...