எந்த வேட்பாளருக்கும் ஆதரவு இல்லை: இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவிப்பு

Date:

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற எந்த வேட்பாளருக்கும் தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது.

நாட்டின் புதிய ஜனாதிபதியை மக்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் தாம் நாட்டிலுள்ள கத்தோலிக்க மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவே ஜனாதிபதி வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கொழும்பு பேராயரின் ஊடகப் பேச்சாளர் சிறில்காமினி பெர்ணாண்டோ கருத்துத் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நாம் சந்தித்துள்ள போதிலும் எந்த வேட்பாளருக்கும் ஆதரவை வெளியிடப்போவதில்லை எனத் தெரித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாச, ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார, பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச உட்பட மேலும் பல ஜனாதிபதி வேட்பாளர்கள் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...