ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக இன்று (21) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தாலும் தனது அரசியல் பயணம் தொடரும் என அவர் அறிவித்துள்ளார்.
“ ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுபடுத்தியமை தொடர்பில் எனக்கு இன்றளவிலும் கவலை உள்ளது. நாடாளுமன்ற உறுப்புரிமை கிடைக்கப்பெற்றிருந்தாலும் அந்த குற்றம் மனதை வதைத்துக்கொண்டிருக்கின்றது.” எனவும் தலதா குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நோக்கிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.