எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து செயற்படுவதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது.
இன்று (08) கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற மாநாட்டில் இதற்கான ஒப்பந்தத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னிணியின் பொதுச்செயலாளர் ஏ.எல்.எம்.ஷபீல் கைச்சாத்திட்டார்.
இன்று நடைபெற்ற இந்த மாநாட்டில் 8 கட்சிகள் இணைந்த ஐக்கிய மக்கள் கூட்டணி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, மலையக மக்கள் முன்னணி உள்ளிட்ட பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கையொப்பமிடவில்லை.