ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஐ.எஸ் அமைப்பின் சின்னங்கள் அடங்கிய மோதிரங்களை வைத்திருந்ததாகவும் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டதாகவும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவினர், சமூக ஊடகங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் கொடியை பிரச்சாரம் செய்தல் மற்றும் ஊக்குவித்தல் போன்றவற்றின் மூலம் தீவிரவாத மற்றும் பயங்கரவாத சித்தாந்தங்களை ஊக்குவித்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பயங்கரவாத புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆயுதங்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய காணொளிகளை எடிட் செய்து தனது இன்ஸ்டாகிராம் கணக்கின் ஊடாக சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக நீதிமன்றில் தெரிவித்த பயங்கரவாத புலனாய்வு பிரிவின் அதிகாரிகள், இந்த சந்தேக நபரிடம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொடிகளில் குறிப்பிடப்பட்ட சின்னங்கள் அடங்கிய மோதிரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சந்தேகநபரின் தொடர்புடைய நடவடிக்கைகள் காரணமாக தீவிரவாத மற்றும் பயங்கரவாத சிந்தனைகள் ஊக்குவிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே சந்தேகநபரின் நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்கு அவரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்குமாறும் பயங்கரவாத புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தவிடயத்தை பரிசீலித்த நீதவான் பசான் அமரசேன தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளர்.
மேலும் இரத்மலானை பொருபன வீதியைச் சேர்ந்த இமாட் ஷமாம் என்ற சந்தேகநபரிடம் இருந்து பயங்கரவாத அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்கள் கொண்ட பல மோதிரங்கள் கைப்பற்றப்பட்டதாக விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர் .