கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு, கோட்டை ரயில் நிலையம் மற்றும் மாகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்துக்கு புதிய சொகுசு பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
AirPort Terminal Shuttle Service என்ற பெயரில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்கவால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று இது, ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதுவரை இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்குள் போக்குவரத்து சேவை நிறுவனத்தின் வசதிகள் கிடைக்காமையால் விமான நிலையத்திலிருந்து சுமார் 02 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள எவரிவத்தை பஸ் நிலையத்துக்கு பயணப் பொதிகளுடன் பயணிக்க நேரிடுகிறது.