கம்பஹா – களனி வலய தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கிடையில் முதன் முறையாக நடத்தப்பட்ட கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் கஹட்டோவிட்ட அல்பத்ரியா மகா வித்தியாலயம் சம்பியனானது.
கம்பஹா – களனி வலய தமிழ் மொழிமூல பாடசாலைகள் மேல் மாகாணத்தில் காணப்படுகின்ற மிகவும் சிறந்த கால்பந்து அணிகளை கொண்டவையாக காணப்படுகின்ற நிலையில், இவற்றுக்கிடையில் கால்பந்து சுற்றுப் போட்டியொன்றை நடத்துவதற்கு கம்பஹா – களனி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம். தௌசீர் அவர்கள் வழிகாட்டல் வழங்கியிருந்தார்.
இந்த கம்பஹா களனி வலயக்கல்வி பாடசாலைகளும் 8 பாடசாலைகளுக்கிடையிலான இந்த சுற்றுப் போட்டியினை மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலை காற்பந்து ஒன்றியம், ‘எக்ஸ் மொபைல்’ அனுசரணையுடன் ஏற்பாடு செய்திருந்தது.
மள்வானை அல்முபாரக் மத்தியக் கல்லூரி, திஹாரி அல் அஸ்கர் மத்திய கல்லூரி மாபொல அல் அஷ்ரப் மகா வித்தியாலயம், கஹட்டோவிட்ட அல்பத்ரியா ம.வி., உலஹிட்டியவல அல்மஹ்மூத், யட்டிஹேன அல்முஸ்தபா, உடுகொட அரபா, பூகொட குமாரிமுல்ல மகா வித்தியாலய 17 வயதிற்கு கீழ்பட்ட வயதுகளுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிகளில் அல்பத்ரியா மகா வித்தியாலயம் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.
நேற்றைய தினம் நடைபெற்ற இறுதி போட்டியில் திஹாரி அல் அஸ்கர் கல்லூரியுடன் மோதி 3-0 கோல்கள் வித்தியாசத்தில் பத்ரியா அணி சம்பியனானது.
கம்பஹா களனி வலய பிரதிக் கல்விப்பணிபாளர் தௌசீர் வழிகாட்டலின் கீழ் நடந்த போட்டிகள் பிரதேச மாணவர்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் வலுப்படுத்துவதையும் இம்மாணவர்களின் திறமைகளை அறிந்துகொள்ளவும் கால்பந்தாட்டத்திற்கான ஆர்வத்தினை அதிகரிக்கச் செய்தலையும் கம்பஹா களனி வலயத்தைச் சேர்ந்த சிறந்த கால்பந்து அணியை உருவாக்குதலையும் அல்முபாரக் தேசிய பாடசாலையை இப்பிரதேசத்தில் மேலும் பிரபல்யப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு சொய்யப்பட்டிருந்தது.