1959 ஆம் ஆண்டு முஸ்லிம் பெண்களுக்காக கட்டாய பாடசாலைக் கல்வியுடன் அரபு மொழி மற்றும் சன்மார்க்க கல்வியை கற்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட கள்எலிய பெண்கள் அரபுக் கல்லூரியின் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு பொதுமக்களுக்கு அறிவுறுத்த இலங்கை வக்பு சபை முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அந்தவகையில் கல்லூரிக்கு சொந்தமான உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அசையும் அசையா சொத்துக்களின் விபரங்களை முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர், இல. 180, முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் என்ற முகவரிக்கோ அல்லது director@muslimaffairs.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் செப்டெம்பர் 3 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு முஸ்லிம் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தகவல் அளிப்பவர் குறித்த எந்த தகவலும் வெளியிடப்பட மாட்டாது என்பதும் குறிப்பிடத்தக்கது.