காசாவின் அல்ஷிஃபாவில் பணிபுரியும் பிரிட்டிஷ் மருத்துவர் டாக்டர் கசான் அபு-சித்தா மருத்துவ சேவைகளில் ஈடுபடுவதைத் தடுக்கவேண்டும் என பிரிட்டிஷ் மருத்துவ கவுன்சிலின் கோரிக்கையை பிரிட்டிஷ் நீதிமன்றம் நிராகரித்தது.
டாக்டர் கசான் அபு-சித்தா தனது முகநூல் மற்றும் சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு எதிராக பதிவுகளை இடுவதாகவும் , அவர் மருத்துவர் பதவிக்கு தகுதியற்றவர் என்றும் பிரிட்டிஷ் பொது மருத்துவ கவுன்சில் குற்றம் சாட்டியுள்ளது.
அந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து அபு சித்தாவின் மருத்துவ சேவைகளை தடை செய்யுமாறு பிரித்தானிய பொது மருத்துவ சபை விடுத்த கோரிக்கையை பிரிட்டிஷ் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
காசாவில் இஸ்ரேல் நடத்திய போரின் ஆரம்ப காலங்களில் காசாவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவராக கசான் அபு சித்தா பிரபலமடைந்தார்.