கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடியை பிறப்பிடமாகக் கொண்ட அஷ்ஷெய்க் எம்.எப்.ஷிபான் பலாஹி அவர்கள் எகிப்தில் உள்ள அல்-அஸ்கர் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய கலாநிதி கற்கையை பூர்த்தி செய்வதற்காக சமர்ப்பித்த ஆய்வின் அடிப்படையில் அவருக்காக நடத்தப்பட்ட வாய்மொழி பரீட்சையில் அதிவிசேட சித்தியைப் பெற்று கலாநிதி பட்டத்தை பூர்த்தி செய்துள்ளார்.
அல் அஸ்கர் பல்கலைக்கழகத்தின் மூத்த அறிஞரான கலாநிதி உமர் ஹாசீம் அவர்களின் மேற்பார்வையில் இந்த கலாநிதி கற்கைக்கான வாய்மொழி பரீட்சை நடைபெற்றமை சிறப்பம்சமாகும்.
ஏற்கனவே காத்தான்குடியை சேர்ந்த பேராசிரியர் அஷ்ரப் அவர்கள் அதேதுறையில் கலாநிதி பட்டத்தை பெற்றுள்ளார் என்பதுடன் அவர் தற்போது சவூதி அரேபியாவின் பல்கலைக்கழகமொன்றில் பேராசிரியாக கடமையாற்றுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.