கிழக்குப் பல்கலைக்கழக ஆய்வு மாநாட்டில் மெத்திக்கா வளவாளராக கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு!

Date:

நவம்பர் 28 ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கும் பிராந்திய சவால்களை எதிர்கொள்வதற்கான ‘அறிவியல் அணுகுமுறை’ எனும் தொனிப் பொருளிலான ஆய்வரங்குக்கு வளவாளராக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர் மெத்திகா எஸ். விதானகே அழைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புக் கிளம்பியிருக்கியது.

இது குறித்து இலங்கை மருத்துவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்கு குழுவின் முன்னாள் அங்கத்தவரும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் குடும்ப மருத்துவத் துறை ஸ்தாபகருமான Dr. ருவைஸ் ஹனிபா MBBS DFM PgDip MSc MD FCGP MRCGP CTHE, SEDA அவர்கள் கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் மற்றும் உப வேந்தர்களுக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அழைக்கப்படும் பேச்சாளர்களும் அவர்களது உள்ளடக்கங்களும் விஞ்ஞான பூர்வமானதாகவும், நெறிமுறை சார்ந்ததாகவும், நம்பகமானதாகவும், ஒருமைப்பாட்டைப் பேணுவதாகவும் அமையும் போது அது அறிவுச் சமூகத்துக்கும் பொதுவில் இலங்கையர்க்கும் பெருமளவில் நன்மை பயப்பதாக அமையும்.

அல்லாத போது உங்களது அமர்வுகள் பல்கலைக்கழகம் சார் கல்விச் சமூகத்தை கேலிக்குரியதாக மாற்றி விடும் எனக் குறிப்பிட்டுள்ள Dr. ருவைஸ் ஹனிபா, பிரதான பேச்சாளராக அழைத்துள்ள மெத்திகா எஸ் விதானகே தார்மீகப் பண்புகளோ, நெறிமுறைகளோ விஞ்ஞான ரீதியான ஒருமைப்பாடுகளோ அற்ற மதிப்பிழந்து போன ஒருவராவார்.

கோவிட் 19 சடலங்களை அகற்றுவதில் அவரது விஞ்ஞான ரீதியான அணுகுமுறை, தேசியப் பிரச்சினை ஒன்றைத் தீர்ப்பதில் விஞ்ஞானிகளையும் அவர்களது அணுகுமுறைகளையும் கேலிக்குள்ளாக்கியிருக்கிறது.

கோவிட் 19 சடலங்களை அப்புறப்படுத்துவது தொடர்பில் சர்வதேச வழிகாட்டல்களையும் கோவிட் 19 நடைமுறைகளையும் மீறி அவர் வழங்கிய அறிவுக்கொவ்வாத தீர்ப்பு, பலவந்த எரிப்பு மட்டுமே என்ற விஞ்ஞானத்துக்கு மாற்றமான நடைமுறையைக் கொண்டு வந்து பின்னர் மன்னிப்புக் கேட்கும் நிலைக்கு அரசாங்கத்தைத் தள்ளியது.

ஆயிரக்கணக்கான இலங்கையரை பாதிப்புக்குள்ளாக்கிய இந்தத் தீர்மானத்துக்கான அடிப்படை என்ன என்பது தொடர்பில் மெத்திகா விதானகே இதுவரை எதனையும் வெளியிடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில், 2024 ஆம் ஆண்டுக்கான உங்களின் ஆராய்ச்சி அமர்வின் பிரதான பேச்சாளராக மெத்திகா எஸ். விதானகேவை உங்கள் பல்கலைக்கழகங்கள் தெரிவு செய்திருப்பது கல்விசார் சமூகத்தை குழப்பமடையச் செய்வதுடன், அவரால் மிகுந்த துன்பத்தையும் நம்பிக்கையின்மையையும் அனுபவித்த அவரால் அனுதாபமோ ஆதரவோ இரக்கமோ காட்டப்படாத ஆயிரக்கணக்கான இலங்கைப் பிரஜைகளின் உணர்வுகளை அவமதிக்கவும் செய்வதாகும்.

இந்த அடிப்படைப் பெறுமானங்கள் இல்லாத விஞ்ஞானம் கேடானது என்பதோடு நமது சமூகங்களில் இத்தகைய வெறுப்பை பரப்புவதில் பேர் பெற்ற நிரூபிக்கப்பட்ட நபர்களுக்கு முக்கியத்துவமும் அங்கீகாரமும் வழங்கி ஊக்குவிக்கக்கூடாது.

சிறந்த இலங்கைக்கான யுஜிசியின் தொலைநோக்கினையும் பணிக்கூற்றையும் செயல்படுத்துவதற்குக் கடமைப்பட்டிருக்கும் உங்களுக்கு நீங்கள் அங்கம் வகிக்கும் இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வெளிப்படுத்தப்பட்ட தொலைநோக்கு, பணிக் கூற்று அறிக்கைகள் மற்றும் பெறுமானங்களை உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.

இந்த வகையில் மெத்திகா விதானகேயை வளவாளராக அழைத்திருப்பதை மீள்பரிசீலனை செய்யுமாறு வேண்டிக் கொள்கிறேன் என Dr ருவைஸ் ஹனிபா   குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...