‘குடு திகா..’:தொலைக்காட்சி நேர்காணலில் கைகலப்பில் ஈடுபட்ட தமிழ் எம்.பிக்கள்

Date:

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியின் போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மோதிக் கொண்டுள்ளனர்.

மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் மற்றும் வேலுகுமார் ஆகியோர் இவ்வாறு நிகழ்ச்சியின் இடை நடுவில் மோதிக் கொண்டுள்ளனர்.

தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருக்கக் கூடிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

எனினும், தமிழ் முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், கட்சியின் தீர்மானத்தை மீறி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு  ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்குள் உள்ளக மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில், ஒருவர் மாற்றி ஒருவர் பொது வெளிகளில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை துரோகி என பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.

இந்தநிலையில், இவர்கள் இருவரும் குறித்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி  விவாதத்தின் போது திகாம்பரம் எம்.பி, வேலுகுமார் எம்.பியை பார் குமார் என்று திட்டினார்.

பதிலுக்கு வேலுகுமார் எம்.பி, குடு திகா என்று திட்டினார். இதனால் இருவருக்கு வாக்குவாதம் முற்றியது. பங்குபற்றிய போது வாக்குவாதம் தீவிரமடைந்து அது மோதலில் முடிவடைந்துள்ளது.

 

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...