கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் ‘யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்’ தினம் அனுஷ்டிப்பு!

Date:

2019 ஆகஸ்ட் 5ஆம் திகதி காஸ்மீருக்கான சுய நிர்ண உரிமை இந்தியாவினால் பறித்தெடுக்கப்பட்டதை நினைவு கூருகின்ற “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் (காஷ்மீர் சுரண்டல் தினம்) இன்று இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்தானிகராயத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் மிகவும் பழமை வாய்ந்த மனி உரிமை பிரச்சினையான காஷ்மீர் விவகாரம் தொடர்பான அனைத்து சர்வதேச சட்டங்களும் ஆக்கிரமிப்பு இந்தியாவினால் மீறப்படுவதை இந்நாளில் ஞாபகப்படுத்தப்படுகிறது.

இலங்கைக்கான பாகிஷ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாகிஸ்தான் ஜனாதிபதி மேன்ன்மை தாங்கிய ஆசிஃப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் முஹம்மமட் ஷாபாஸ் ஷெரீஃப் ஆகியோர் வழங்கிய அறிக்கைகளும் வாசிக்கப்பட்டன.

பிரதான உரையை அரசியல் ஆலோசகர் சிராஸ் யூனூஸ் சுரையா ரிஸ்வி மற்றும் பாகிஷ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் வணிகத்துறை பொறுப்பாளர் மெஹவிஸ் சமி ஆகியோர் ஆற்றினர்.

இதன்போது’ துரதிர்ஷ்டவசமாக, இந்தியா தனது உறுதிமொழிகளை மதிக்க மறுப்பதாலும், அடிப்படை மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்களை மதிக்காததாலும் இந்த சர்ச்சை இன்னும்  தீர்க்கப்படாமல் உள்ளதாக உயர்ஸ்தானிகர் பாகிஸ்தான் ஃபஹீம் உல் அஸீஸ் குறிப்பிட்டார்.

மனிதாபிமானமற்ற இராணுவ முற்றுகை, தகவல் தொடர்பு முற்றுகை, சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள், போலி என்கவுன்டர்கள் மூலம் அப்பாவி காஷ்மீரிகள் மீதான அடக்குமுறை மற்றும் மிருகத்தனமான தாக்குதல் தொடர்பிலும்  உயர்ஸ்தானிகர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வினைத் தொடர்ந்து காஷ்மீர் தொடர்பான ஆவணப்படமும் புகைப்பட கண்காட்சியும் இடம்பெற்றன.

Popular

More like this
Related

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...