சூரியனின் தெற்கு நோக்கிய தோற்ற இடப்பெயர்ச்சி காரணமாக, ஓகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 06 வரை இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொள்ளும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதற்கமைய, இன்று (29) பி.ப. 12:11 மணியளில் ஒட்டுசுட்டான், மாங்குளம், தேரங்கண்டல், மல்லாவி ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றையதினம் (28) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா, புத்தளம் மாவட்டங்களிலும் 50 மி.மீ. வரையான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் .