ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இந்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளது.
இதேவேளை தனிப்பட்ட காரணங்களால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்தலில் போட்டியிடப்
போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா நேற்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கடிதத்தினையும் தம்மிக்க பெரேரா கட்சித் தலைமைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கபப்பட்டுள்ளார்.