ஜனாதிபதி நிதிய ஓகஸ்ட் புலமைப்பரிசில் இன்று வங்கிக் கணக்குகளுக்கு நேரடி வைப்பு!

Date:

ஜனாதிபதி நிதியத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் புலமைப்பரிசில் திட்டங்களின் கீழ் தகுதி பெற்ற புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கான 2024 ஓகஸ்ட் மாதத்திற்கான புலமைப்பரிசில் கொடுப்பனவு இன்று (01) புலமைப்பரிசில் பெறுபவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வைப்புச் செய்யப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் வங்கிகளில் வைப்பு செய்யப்படும் போது, புலமைப்பரிசில் பெறுபவர்கள் அனைவருக்கும் இது குறித்து குறுஞ்செய்தி (SMS) மூலம் தெரிவிக்கப்படும்.

 

2022/2023 க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி பெற்று, க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள 3000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 வீதம் வழங்கப்படும் புலமைப்பரிசில் தவணைத் தொகையின் 17 ஆவது தவணையும், 2023/2024 க. பொ. த இல் சாதாரண தரத்தில் சித்தி பெற்று, க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள 6000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா வீதம் வழங்கப்படும் புலமைப்பரிசில் தவணைத் தொகையின் 06ஆம் தவணை உரிய கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், தரம் 01 தொடக்கம் தரம் 11 வரை கல்வி கற்கும் 100,000 மாணவர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபா வீதம் வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகையின் 05 ஆவது தவணை, பிரிவெனா மற்றும் பிக்குனிமார்களுக்கும், பிரிவெனா (சாதாரண தரம்)/ க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி பெற்று, “பிராசீன” பரீட்சைகள் அல்லது க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பிக்கு மாணவர்கள் உட்பட 500 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா வீதம் வழங்கப்படும் புலமைப்பரிசில் தவணைத் தொகையின் 04 தவணைத் தொகையும் இன்று உரியவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த புலமைப்பரிசில் திட்டங்களுக்காக சுமார் 116,000 மாணவர்களுக்கு 5000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை செலுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை ஜனாதிபதி நிதியம் மேற்கொண்டு வருகின்றது.

ஒரு இலட்சம் புலமைப்பரிசில் வேலைத்திட்டத்திற்கு பாடசாலை மட்டத்தில் கல்வி மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டதால், விண்ணப்ப படிவங்கள் தாமதமானதாலோ, வங்கி கணக்குகள் தொடர்பான சிக்கல்களாலோ இதுவரை புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் கிடைக்காத, ஆனால் புலமைப்பரிசில் பெறத் தகுதியானவர்களுக்கான கொடுப்பனவுகள் 2024 ஓகஸ்ட் மாதத்தில் வைப்புச் செய்யப்படவுள்ளதோடு, அது குறித்த விபரங்கள் ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்படும்.

இதன்படி, மேலதிக விபரங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கமான www.facebook.com/president.fund ஐ பார்க்கவும்.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...