முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு (Diana Gamage) குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தால் கையளிக்கப்பட்டுள்ளது.
இரட்டை பிரஜாவுரிமையை கொண்டிருந்தமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரதிவாதியான டயனா கமகேவிற்கு எதிராக திறந்த நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின் பிணை வழங்கப்பட்டுள்ளது.
25,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, பிரதிவாதியான டயனா கமகே தனது சட்டத்தரணியுடன் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகியிருந்தார்.