காசாவுக்கு எதிரான இஸ்ரேலிய இனச் சுத்திகரிப்பு போர் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட காலம் நெருங்குகின்ற இச்சூழ்நிலையில் தினசரி துனபத்துக்குள்ளாகியிருக்கும் காசா மக்களுக்காக பல நாடுகளையும் சேர்ந்த மனிதாபிமானத்தை நேசிப்போர் பல்வேறு வழிகளில் தமது மனிதாபிமான உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் காசாவைச் சூழவுள்ள ஜோர்தான், லெபனான் உள்ளிட்ட பகுதி மக்கள் காசாவுக்காக வெளிப்படுத்தும் உணர்வு பல வகைகளில் அமைந்துள்ளன.
அந்தவகையில், கடந்த 23ஆம் திகதி பொறியியலாளரான முல்ஹம் என்ற இளைஞர் தனது திருமணத்தை மிக எளிமையான முறையில் ஜோர்தான் தலைநகரான அம்மானில் முடித்து விட்டு அதற்கான வலீமா விருந்தை காசாவில் ஏற்பாடு செய்து தனது காசா மீதான மனிதாபிமான உணர்வை வெளிப்படுத்தியிருந்தார்.
இது குறித்த படங்கள் …..