தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் பாஸில் தெரிவு

Date:

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பப் பீடங்களுள் ஒன்றாக விளங்கும் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் எம்.எம். பாஸில் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கலை கலாசார பீடத்திற்கான பீடாதிபதியாக பணியாற்றிய பேராசிரியர் பாஸிலின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் புதிய பீடாதிபதியினைத் தெரிவு செய்யும் நிகழ்வு நேற்று (15) இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது, பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீட் U.L Abdul Majeed தலைமையில் பீடத்தின் கேட்போர் கூடத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிகழ்வில் குறித்த வெற்றிடத்துக்காக பேராசிரியர் எம்.எம். பாஸில் போட்டியிட்டிருந்த நிலையில், இதில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அவர் மீண்டும் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

அத்தோடு, இவர் கடந்த (16) எட்டாவது பீடாதிபதியாக போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

 

 

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...