மழையுடனான வானிலை தொடரும்

Date:

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது பெய்துவரும் மழையுடனான வானிலையில் இன்றும் (16) நாளையும் (17) தற்காலிக அதிகரிப்பு ஏற்படுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றையதினம் (16) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிக மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு, ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

Popular

More like this
Related

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...

நாடு முழுவதும் பலத்த மழை, காற்று தீவிரமடையலாம்:மக்கள் அவதானம்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12...

சீரற்ற வானிலை: உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த....