கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை இலங்கை நாடாளுமன்றத்தை பிரநிதித்துவப்படுத்தியுள்ள 225 உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அங்கு கடமையில் ஈடுபடும் அதிகாரிகள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு உணவு மற்றும் பானங்கள் வாங்குவதற்காக 23 கோடியே 2 இலட்சத்து 67 ஆயிரத்து 800 ரூபாய் தொண்ணூற்று ஐந்து சதம் (230,267,800.95) செலவிடப்பட்டுள்ளது.
தணிக்கை அறிக்கையின் படி, நாடாளுமன்றம் தொடர்பான அறிக்கையில் இவ்விடயம் வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்கான குடிநீர் போத்தல்கள், சோஸ்களுக்கு இருபத்தைந்து இலட்சத்து எழுபத்து மூவாயிரத்து இருபத்தைந்து ரூபாய் (2,573,025) செலவிடப்பட்டதாக அறிக்கை கூறுகின்றது.
கொள்முதல் வழிகாட்டுதல்களின்படி, நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலை மூலம் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் பொருட்களை வாங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் உணவுக் கட்டுப்பாடு திணைக்களத்தால் 2023ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட 91 வீதமான நாடாளுமன்ற உறுப்பினர்களும், உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரும் விருந்தினர்கள் மற்றும் 37,192 ஊழியர்களுக்கு நாடாளுமன்ற உணவகத்தினால் வசதிகள் வழங்கப்பட்டதாகவும் கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது.