நாட்டில் சகவாழ்வை ஏற்படுத்தும் ஜம்இய்யத்துல் உலமாவின் பணிகள் பாராட்டத்தக்கது: ஜனாதிபதி வேட்பாளர் சஜித்

Date:

குறிப்பு: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக நாடு முழுவதும் தேர்தல் பிராசார கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் மதத் தலைவர்களை சந்தித்து ஆசிபெற்று வருவதோடு பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.

அண்மையில் ஜனாதிபதி வேட்பாளரான அனுரகுமார திசாநாயக்க அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அங்கத்தவர்களை சந்தித்தார்.

அதேவரிசையில் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவும் தற்போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையகத்திற்கு விஜயம் செய்து பல்வேறு விடயங்களை கலந்துரையாடியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்திற்கு (23)  விஜயம் செய்தனர்.

இச்சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சார்பில் அதன் தலைவர், பொதுச் செயலாளர், உப தலைவர்கள் உப செயலாளர்கள், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஐக்கிய தேசிய முன்னணியின் பிரமுகர்களுக்கு ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி,பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் ஆகியோரினால் ஜம்இய்யத்துல் உலமா பற்றிய அறிமுகமும் முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டன.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவித அரசியல் கட்சிகள் சார்பற்ற, எல்லா காலங்களிலும் இலங்கை வாழ் மக்கள் அனைவரும் புரிந்துணர்வோடும் சகவாழ்வோடும் வாழ்வதற்கான வழிகாட்டலை வழங்கக்கூடிய ஒரு சமய நிறுவனமாகும் என்பது பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.

தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் நாட்டின் சகல பிரஜைகளுக்கும் எம்மை எல்லாக் காலங்களிலும் தொடர்பு கொள்ள முடியும் என்பதுடன், சீ.ஜீ. வீரமந்திரீ அவர்கள் எழுதிய ‘Islamic Jurisprudence: An International Perspective’ மற்றும் லோனா தேவராஜா அவர்கள் எழுதிய ‘The Muslims of Sri lanka – Thousand Year of ethnic Harmony’ ஆகிய நூல்களை வாசிப்பதோடு ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்ட ‘විවෘත දෑසින් ඉස්ලාම්’, ‘සමාජ සංවාද’, ‘Don’t be extreme’, ‘மன்ஹஜ்’ (மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடுகளும் வழிகாட்டல்களும்) ஆகிய நூல்களையும் சகல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய மதத் தலைவர்கள் படிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தினார்கள்.

அத்தோடு பலஸ்தீன மக்கள் உட்பட சகல மக்களும் சுபிட்சமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கான சூழல் உருவாக வேண்டும் என பிரார்த்தித்ததோடு மேலும் பல விடயங்களும் முன்வைக்கப்பட்டன.

அத்துடன்இ வாக்களிப்பு என்பது ஓர் அமானிதமாகும். இவ்விடயத்தில் வாக்களிப்பவரும் வாக்களிக்கப்படுபவரும் மிகுந்த அவதானத்துடனும் பொறுப்புணர்ச்சியுடனும் செயற்படக் கடமைப்பட்டுள்ளனர் என்ற செய்தியும் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களினால் நினைவுபடுத்தப்பட்டது.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் கூறுகையில்,

தனது அரசியல் கோட்பாடுகளையும் மேற்கொண்ட சமூகப் பணிகள் பற்றியும் விளக்கியதுடன்  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மேற்கொள்ளும் சகவாழ்வுத் திட்டத்தினையும் சகவாழ்வு மையங்களையும் பாராட்டினார்.

மேலும்  இன, மத, மொழி வேறுபாடுகள் இல்லாத சுழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.

நிகழ்வின் இறுதியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும் ஏனைய சில வெளியீடுகளும் கையளிக்கப்பட்டன.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...