பங்களாதேஷில் இருந்து ஷேக் ஹசீனா வெளியேறிய சில மணி நேரங்களில் அவரது அரண்மனைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அவரது படுக்கை அறை, நீச்சல் குளம், என அனைத்தையும் பயன்படுத்தினர்.
மேலும், வீட்டில் இருந்த பொருட்களையும் போட்டி போட்டு அள்ளி சென்றனர். அங்கே இருந்த உணவு பொருட்களையும் ஒரு கை பார்த்தனர்.
இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷில் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது. அங்கு இதுவரை ஏற்பட்ட வன்முறையில் சுமார் 200 பேர் கொல்லப்பட்ட நிலையில், நிலைமை கட்டுக்கடங்காமல் போனதை அடுத்து ஷேக் ஹசீனா தனது பொறுப்பில் இருந்து விலகினார்.
ஹேக் ஹசீனா பிரதமர் பதவியை இராஜினாமா செய்த சில நிமிடங்களில் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய அந்நாட்டு ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான் உரையாற்றினார். இந்த உரையில், “இடைக்கால அரசு விரைவாக அமைக்கப்படும். அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதன் பின்னணியில் இருந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.
நாட்டில் அவசர நிலை பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறினார். இதைத் தொடர்ந்து, வங்கதேச தேசிய கட்சி, ஜதியா கட்சி, ஜமாத் இ இஸ்லாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் ராணுவ தளபதி ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இடைக்கால அரசு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரதமர் பதவியில் இருந்து விலகியதும் உடனடியாக தனது சகோதரி ஷேக் ரேஹானாவுடன் பங்களாதேஷின் கனபாபன் என்ற இடத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் ஷேக் ஹசீனா புறப்பட்டுச் சென்றார்.
இந்தியாவின் திரிபுராவில் ஹெலிகாப்டர் தரையிறங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கிருந்து டெல்லி புறப்பட்டுள்ளதாகவும் லண்டன் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்ரன.
ஆனால் ஷேக் ஹசீனா, எங்கு செல்ல இருக்கிறார் என்ற தகவல் கிடைக்கவில்லை. வன்முறை கட்டுக்கடங்காமல் போனதை அடுத்து, நாட்டை விட்டு அவசர அவசரமாக ஷேக் ஹசீனா தப்பி ஓடினார். ஷேக் ஹசீனா வெளியேறிய சில மணி நேரங்களில் அவரது அரண்மனைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அவரது படுக்கை அறை, நீச்சல் குளம், என அனைத்தையும் பயன்படுத்தினர்.
தொடர்ந்து வீட்டில் இருந்த பொருட்களையும் போட்டி போட்டு அள்ளி சென்றனர். அங்கே இருந்த உணவு பொருட்களையும் ஒரு கை பார்த்தனர். போராட்டக்கார்கள் கையில் கிடைத்த பொருட்களை ஒன்று விடாமல் அள்ளி செல்லும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.