பங்களாதேஷில் மீண்டும் பதற்றம்: துணை இராணுவ படையினருக்கு எதிராக வெடித்த மாணவர் போராட்டம்

Date:

பங்களாதேஷில் இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போது மீண்டும் மாணவர்கள் போராட்டம் வெடித்திருக்கிறது. இந்த போராட்டத்திற்கு அந்நாட்டின் துணை ராணுவப்படைதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

அண்மைக்காலங்களில் பங்களாதேஷில், இட ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் மாணவர் போராட்டம் வெடித்தது.

இந்த போராட்டத்தை அடக்க காவல்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையிலும், வன்முறையிலும் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

1000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். வன்முறையையடுத்து ஹசீனா பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

தற்போது அங்கு, நோபல் பரிசு பெற்ற முகமது யூனூஸ் தலைமையில் இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘பங்ளாதேஷ் அன்சார்’ எனும் அந்நாட்டின் துணை ராணுவப்படையினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சர்வதேச அளவில் மிகப்பெரிய துணை ராணுவப்படையில் ‘பங்ளாதேஷ் அன்சார்யும்’ ஒன்று.

வங்கதேசம் சுதந்திரம் அடைவதற்கு முன்னரே இது இருந்து வந்திருக்கிறது. இப்போது இதில் 60 லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் இருக்கிறார்கள். இவர்கள், பொலிஸுக்கும், ராணுவத்திற்கும் உதவி வருகிறார்கள்.

இப்படி இருக்கையில், தங்களின் பணிகள் நிரந்தரப் படுத்தப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பங்ளாதேஷ தலைநகர் டாக்காவில், தலைமை செயலகம் முன்னர் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தின் போது, அந்நாட்டின் மாணவர் தலைவரும், அரசின் ஆலோசகருமான நஹீம் இஸ்லாம் என்பரை போராட்டக்காரர்கள் சிறை பிடித்திருந்தனர்.

இதனையடுத்து மாணவர்களுக்கும், இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது ஒரு கட்டத்தில் வன்முறையாக வெடித்தது. இதில் சுமார் 50 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

வன்முறையை அடுத்து பொலிஸும், இராணுவமும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டிருக்கிறது. புதிய அரசு பொறுப்பேற்றவுடன் போராட்டங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் போராட்டம் வெடித்திருப்பது அந்நாட்டு மக்களிடையே கவலையை எழுப்பியுள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...