பிரித்தானியாவின் பல பகுதிகளில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து பிரித்தானியாவுக்குச் செல்லவேண்டாம் என்று சில நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பிரித்தானியாவிலிருக்கும் தங்கள் நாட்டவர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
பிரித்தானியாவின் பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதனால் பிரித்தானியாவிலுள்ள தங்களது நாட்டவர்களுக்கு சில நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
முதலாவது பயண எச்சரிக்கை விடுத்த நாடாக மலேசியா லண்டனிலிருக்கும் உயர் ஸ்தானிகர் மூலம், மலேசிய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், பிரித்தானியாவுக்குச் செல்லும் மற்றும் பிரித்தானியாவிலிருக்கும் மலேசிய நாட்டவர்கள், போராட்டங்கள் நடக்கும் இடங்களிலிருந்து விலகியிருக்குமாறும், கவனமாக இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி நடந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.