பிரித்தானியாவில் (UK) இடம்பெற்று வரும் புலம்பெயர்தலுக்கு எதிரான வன்முறைகளை அதி தீவிர வலது சாரிகள் அமைப்பானது தொடர்ந்தும் மேற்கொண்டு வந்த வண்ணம் இருக்கின்றது.
இந்த நிலையில், பிரித்தானியாவில் இனவெறி தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து, தமிழர்கள் தாக்கப்படலாம் என்ற அச்சநிலை எழுந்துள்ளது.
இதன்படி லண்டன் உள்ளிட்ட பல நகரங்களில் இடம்பெறும் பேரணிகள் தொடர்பான பட்டியலை வலது சாரி அமைப்பு வெளியிட்டுள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள பட்டியலில் லண்டனில் ஈழ தமிழ் மக்கள் அதிகமாக வாழும் இடங்களும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இப்பட்டியல் நேற்று முதல் மக்களிடையே பதற்றங்களை உருவாக்கியுள்ள நிலையில் மக்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்படுமென பிரதமர் கெய்ர் ஸ்டாமர் (Keir Starmer) உறுதியளித்துள்ளார்.