அசாம் மாநில சட்டமன்றத்தில் முஸ்லிம் விவாக, விவாகரத்து தகவல்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்கான சட்டமூலமொன்றை ஹிமாந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான ஆளுங்கட்சி தாக்கல் செய்துள்ளது.
முன்னதாக முஸ்லிம்கள் தமது சமயத்தலைவர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொள்வார்கள். இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் முஸ்லிம்கள் விவாகம் கட்டாயம் பதிவுசெய்ய வேண்டும்.
இந்தச் சட்டத்தின் படி பெண்ணின் திருமண வயது 18ஆகவும் ஆணின் திருமண வயது 21 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சிறுவர் திருமணம் தடுக்கப்படும் என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டமே அனைவருக்குமான சட்டமாக்கப்பட்டது.தற்போது அசாம் மாநிலம் இதனை நடைமுறைப்படுத்தவிருக்கின்றது.
முஸ்லிம்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் வகையில் தேர்தல் வருடத்தில் வாக்காளர்களை பிளவுபடுத்துவதற்காக அந்தச்சட்டம் கொண்டு வரப்படுகின்றது என எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.