மக்கா புனித பயண யாத்ரீகர்களுக்கு ஓர் நற்செய்தி: 2025 இல்  ஹிரா குகைக்கு கேபிள் கார்

Date:

சவூதி அரேபியா ஊடகங்கள் தெரிவிக்கின்ற செய்திகளின் பிரகாரம் 634 மீற்றர் உயரத்தைக் கொண்ட மக்காவில் இருக்கின்ற  ஹிரா குகைக்கு கேபிள் கார் மூலம் செல்வதற்கான ஏற்பாடுகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த திட்டத்தின் அதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஹிரா குகைக்கு செல்வதற்கான கேபிள் கார் திட்டம் இப்போது முடியும் தருவாயில் இருக்கிறது. 2025ஆம் ஆண்டில’ அது பூர்த்தியாகும் என்று நம்புகின்றோம்.

அதேநேரத்தில் அதற்கு அண்மைப் பகுதியில் ஓர் நூதனசாலையும் ஜபல் உமர் என்ற மலையடிவாரத்தில் பக்கத்தில் அமைக்கப்படவிருக்கிறதாகவும் அதுவும் அதே வருடத்தில் திறந்துவைக்கப்படவுள்ளதாகவும் அதிகாரி தெரிவித்தார்.

ஹிரா குகை என்பது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹாவின் இறைத்தூதராக பிரகடனம் செய்யப்பட்டதற்கு பின்னால் அவர்களுக்கு முதன் முதலாக வஹி என்று சொல்கின்ற குர்ஆனுடைய செய்திகள் இறக்கப்பட்ட இடமாக இந்த ஹிரா குகை கருதப்படுகிறது.

இதனால் புனித பயணம் மேற்கொள்கின்ற இலட்சக்கணக்கான யாத்ரீகர்கள் இந்த ஹிரா குகையை தரிசிப்பதற்காக செல்வது வழக்கமாக இருக்கிறது.

அந்தவகையிலே இந்த ஹிரா குகைக்கு ஏறிச்செல்கின்ற மக்களுடைய சிரமத்தை குறைக்கின்ற வகையில் இந்த கேபிள் கார் முறை அறிமுகம் செய்யப்பட்டிருப்பதுக ஓர் மகிழ்ச்சியான செய்தியாகும்.

Popular

More like this
Related

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...