ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் உடல், நேற்று வியாழக்கிழமை (01) மாலை கத்தார் தலைநகர் தோஹாவை சென்றடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இன்று வெள்ளிக்கிழமை (02) அவரது உடல், அடக்கம் செய்வதற்காக ஆயத்தமாக கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ளது.
இஸ்மாயில் ஹனியாவின் மனைவி ஹஜ்ஜா உம்மு அல்-அப்த் தோஹாவில் உள்ள அவர்களது இல்லத்தில் அவரது உடலைப் பெற்றுக் கொண்ட பின் கூறிய நெகிழ்ச்சியான வார்த்தைகள் இவை..
‘என் அன்புள்ளவரே இவ்வுலகிலும் மறுமையிலும் எனது ஆதரவு உங்களுக்கு இருக்கும். அல்லாஹ் உங்கள் மீது மகிழ்ச்சியடையட்டும், எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அல்ஹம்துலில்லாஹ்’
மறைந்த இஸ்மாயில் ஹனியாவின் உடல் மக்கள் மற்றும் உத்தியோகபூர்வ வருகையுடன் வெள்ளிக்கிழமை அவரது இறுதிச் சடங்குகளுக்குத் தயாராகும் வகையில் வியாழன் மாலை தோஹாவை வந்தடைந்தது.
தோஹாவில் உள்ள இமாம் முஹம்மது பின் அப்துல் வஹாப் மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு இறுதிச் சடங்கு நடத்தப்பட்டு அல்-வுசைலில் உள்ள ஸ்தாபக இமாமின் கல்லறையில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
The wife of Hamas’ political leader, Ismail Haniyeh, who was assassinated in an Israeli airstrike in Tehran, on July 31.
“We inherited your determination and patience” pic.twitter.com/wWiy1dtlaa
— The Palestine Chronicle (@PalestineChron) August 1, 2024