முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட அந்தஸ்திலிருந்து ஹரீஸ் எம்.பி. நீக்கம்: கட்சியின் செயலாளர் கடிதம்

Date:

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறியதற்கான சரியான காரணத்தை விளக்குமாறு கோரி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பரால் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

குறித்த கடிதத்தின் படி, முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட அந்தஸ்திலிருந்து ஹரீஸ் எம்.பி உடனடியாக நீக்கப்படுவதாகவும்,  மேலதிகமாக பிரதித் தலைவர் பதவியிலிருந்து அவர் தற்காலிகமாக நீக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தன்னிலை விளக்கமளிப்பதற்காக அவருக்கு ஒரு வாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்துவது தொடர்பான முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட ஆலோசனைக் கூட்டங்களில் ஹரீஸ் கலந்து கொள்ளவில்லை என்பதும் அவர் மீதான குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.

முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியிலிருந்து ஹரீஸை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக நேற்றையதினம் ஓட்டமாவடியில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்திருந்தார்.

 

 

Popular

More like this
Related

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...